நாகர்கோவில் ஜூலை 20
குமரி லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் 5 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் சிக்கியது.
பேரூராட்சிகளின் இளநிலை பொறியாளரிடம் பணம் கை மாறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்
உதவி பெண் செயற்பொறியாளர் விடுப்பு முடித்து பணியில் சேர்ந்த இரண்டொரு நாளில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார்.
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலை கடை பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்பந்த பணிகளுக்கு பில் எழுத லஞ்சம் பெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி
லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பேரூராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேரூராட்சிகளின் இளநிலை பொறியாளர் சேம் செல்வராஜ் என்பவர் லஞ்ச பெற்ற பணம் ரூபாய் 20 ஆயிரம் அவருடைய மணி பர்ஸ்ஸில் இருந்தது. மேலும் அவர் பயன்படுத்தும் TN 75 H8181 என்ற பதிவு கொண்ட காரில் இருந்து நான்கு லட்சத்தி மூன்றாயிரம் ரூபாயும், உண்ணாமலைக்கடை பேரூராட்சி அலுவலக ஊழியரிடம் இருந்து 9500 ரூபாயும், நான்கு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ஒரு லட்சத்து 1500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்ட தொகை என மொத்தமாக 5 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணம் பறி முதல் செய்யப்பட்டது. உண்ணாமலை கடை பேரூராட்சி அலுவலகத்திலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் ஐந்து லட்சத்து 34,000 ரூபாயை பறி முதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக உதவி செயற்பொறியாளர் புஷ்பலதா என்பவர் பல நாட்கள் விடுப்பில் இருந்து விட்டு பணிக்கு சேர்த்து இரண்டொரு நாட்கள் ஆன நிலையில் ஒப்பந்ததாரர்கள் தாங்கள் செய்த ஒப்பந்த பணிக்கு பில் எழுதுவதற்கு லஞ்சம் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இது குறித்து மேலும் தீவிர விசாரணை நடந்துவரும் நிலையில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்ற லஞ்சப்பண விவகாரத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தொடர்பான கூடுதல் விசாரணை நடந்து வருகிறதாக தெரிகிறது.