இராமநாதபுரம் ஜுலை 06-
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்தவர் முகமது இப்ராஹிம் ஷா .இவர் தனது உறவினர்வீடு மற்றும் வணிக வளாகம் கட்டும் பணி ஈடுபட்டு வருகிறார். வீடு, வணிக வளாகங்களுக்கு புதிய வரி விதிப்பு கோரி தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் ஆகியோரை அணுகினார். புதிய வரி விதிப்பிற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டனர்.இதுகுறித்து முகமது இப்ராம்சா ராமநாதபுரம் ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இருவரும் கேட்ட தொகை ரூ.20 ஆயிரத்தை, தொண்டி பேரூராட்சி தற்காலிக பணியாளரான கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தொண்டி ராஜனிடம் முஹமது இப்ராஹிம் ஷா தனது நண்பர் மூலம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு போலீசார் தொண்டி ராஜனை கையும், களவுமாக பிடித்தனர். இது தொடர்பாக மகாலிங்கம், ரவிச்சந்திரன், தொண்டி ராஜனிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.