தஞ்சாவூர் அக்.24
தஞ்சாவூர் ரெயில் நிலையத்தில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை துறை சார்பில்
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் கொடியசைத்து தொடங்கி வைத்தார் .பின்னர் அவர் கூறியதாவது:
உலகம் முழுவதும் மார்பகப் புற்று நோய்கள் அதிக அளவில் பரவி வருகிறது. வருமுன் காப்பதே இதற்கான தீர்வாகும். மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் காரணத்தை தொடக்க நிலையிலே கண்டறிந்தால் இதனை கட்டுப் படுத்த முடியும்
மார்பக புற்றுநோயாளிகளை ஆரம்ப நிலையில் கண்டறிந்து அவர்களை உள்நோயாளியாக அனுமதித்து, அறுவை சிகிச்சைகள் உள்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. நாம் அனைவரும் இணைந்து மார்பக புற்றுநோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அதிகப் படியான பெண்களை இந்த பாதிப் பில் இருந்து காக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தஞ்சாவூர் ரெயிலடியில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் காந்திஜி சாலை வழி யாக சென்று இராசா மிராசுதார் மருத்துவமனையில் நிறைவடைந் தது.
இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், அறுவை சிகிச்சை துறை தலைவர் ஜெகதீசன், டாக்டர்கள் ஜீவா ராமன் முத்து நாயகம், ராமச்சந்திரன், கார்த்திகேயன், சுமதி ரவிக்குமார், மற்றும் மருத்துவ மாணவ – மாணவியர்கள், மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டு, பிங்க் நிற குடைகள் பிடித்தபடியும் தொப்பிகள் அணிந்த படியும் சென்றனர்.