தஞ்சாவூர் ஜூலை 18.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள 141 உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது .இதன் மூலம் 10,870 மாணவ மாணவிகள் பயனடைகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில்காலை உணவு திட்ட தொடக்க விழா திருக்கானூர் பட்டியில் உள்ள புனித மரியன்னை உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் முன்னிலை வகித்தார் எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு )டி கே ஜி நீலமேகம் (தஞ்சாவூர்) மேயர் சண். ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். திருக்கானூர் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சேவியர் அனைவரையும் வரவேற் றார்.
இதில் கலந்துகொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் கூறுகையில்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் ,தஞ்சாவூர் ஒன்றியத்தில் 13 பள்ளிகள், திருவையாறு ஒன்றியத்தில் 17 பள்ளிகள், பூதலூர் ஒன்றியத்தில் 13 பள்ளிகள், ஒரத்தநாடு,திருவோ ணம், மதுக்கூர் ஒன்றியத்தில் தலா ஒரு பள்ளிகள், கும்பகோணம் ஒன்றியத்தில் 20 பள்ளிகள், திருவி டைமருதூர் ஒன்றியத்தில் 21 பள்ளி கள், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 23 பள்ளிகளில் இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
மொத்தம் 141 பள்ளிகளில் 10,870 மாணவ மாணவிக்கு காலை உண வு வழங்கப்படுகிறது .இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் ,மகளிர் திட்ட இயக் குனர் சாந்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவி உஷா புண்ணிய மூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.