காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனைப்படி
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் கோவளம் ஊராட்சியில் உள்ள சர்.ஜான் டிமோண்டி ஆர்.சி.தொடக்கபள்ளியில் முதலமைச்சர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எல்.இதயவர்மன் எம்.எல்.ஏ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த இந்நிகழ்சியில் கோவளம் ஊராட்சி மன்றத் தலைவரும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சோபனாதங்கம்சுந்தர் கோவளம் ஊராட்சி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..