கன்னியாகுமரி ஜூன் 24
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் மாடுகட்டி விளையில் ஞானதீபம் மற்றும் அமிர்தா ஸ்கூல் செல்லும் பிரதான சாலையின் பக்கவாட்டு சுவரில் பெரிய உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது சாலையும் சேதமடைந்தது வருகிறது.
இந்த வழியாக பள்ளி நாட்களில் ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் காலையில் பள்ளிக்கு கொண்டு விட்டுவிட்டு,மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு கூட்டி கொண்டு வருகின்றனர்.
அதேபோல் இச்சாலை வழியாக பள்ளி பேருந்துகளும் சென்று வருகின்றது.உடைப்பு ஏற்பட்டுள்ள சாலை பக்கவாட்டு சுவர் தற்போது மேலும் உடைந்து கொண்டே செல்கிறது.
சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரும் போது வாகனங்கள் ஒன்றை ஒன்று கடந்து செல்ல சிரமம் ஏற்பட்டு வருகிறது. பக்கவாட்டு சுவர் இடிந்துள்ளதால் எப்போது வேண்டுமானாலும் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து ஏற்கெனவே செய்திகள் வெளிவந்தும் பேரூராட்சி நிர்வாகம் அதை பற்றி கண்டுகொள்ளாமல் மெத்தனப்போக்கில் இருந்து வருகிறது. ஏதாவது பெரிய அசம்பாவிதம் நடைபெற்றால் மட்டும்தான் நடவடிக்கை எடுப்பார்களா?.
பேரூராட்சி நிர்வாகம் இவ்விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக உடைந்த சாலையின் பக்கவாட்டு சுவரை சரி செய்து பொதுமக்கள் மற்றும் வாகனங்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.