ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோட்டைமேட்டில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவன் 309 வது விழா நடைபெற்றது.
இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் நெற்கட்டான் சேவல் மாமன்னர் பூலித்தேவரின் 309 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் பொங்கல் வைத்து, மாமன்னர் பூலித்தேவர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முக்குலத்தோர் சங்கத்தின் தலைவர் செல்லத்தேவர் தலைமை வகித்தார். பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு விளையாட்டுபோட்டி, உறியடிக்கும் போட்டி, அரசு பொதுத்தேர்வு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பில் அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் பரிசு கொடுக்கப்பட்டது, கிராமப்புற மாணவர்களுக்கு இலவச போட்டித்தேர்வு மையத்தை நடத்திவரும் தேவர் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவர் அரசு போட்டித்தேர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் காளிமுத்து, ஆப்பநாடு இளைஞர்கள் விவசாய சபையின் ஒருங்கிணைப்பாளர் மனோஜ் ஆகியோரின் சமூக சேவையை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது,நிகழ்ச்சியில் நாராயணபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வேல்மயில்முருகன்,பசும்பொன் ஊராட்சி தலைவர் டி.இராமகிருஷ்ணன், விருதுநகர் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் அம்மா சரவணன்,சமுதாய பெரியோர்கள்,பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோட்டைமேடு பொதுமக்கள், பூலித்தேவர் இளைஞர் அணி நிர்வாகிகள் ஏ.மலைராஜ், சி.அய்யனார் மாஸ் ஆகியோர் செய்திருந்தனர்