தென்காசி மாவட்டம் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மு.பி .பா அறக்கட்டளை சார்பிலும் அய்யாபுரம் கிளை கழக திமுக சார்பிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புத்தகப்பை இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது .
தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் உத்தரவின் பேரில் தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம் அறிவுறுத்தலின் பேரில் அய்யாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள மு.பி. பா அறக்கட்டளை சார்பிலும் அய்யாபுரம் கிளை கழக திமுக சார்பிலும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியருக்கு புத்தகப்பை இனிப்புகள் மற்றும் மதிய உணவினை மு.பி.பா நூலகத்தில் வைத்து திமுக பிரமுகர் மற்றும் ஒன்றிய பிரதிநிதி மு.பி.பா
அன்புச் செழியன் வழங்கினார்… நிகழ்ச்சியில் கழக மூத்த முன்னோடி பாலசுப்பிரமணியன், தங்கராஜ், கிளை செயலாளர் செல்வகுமார், இளைஞரணி மணிவண்ணன், KC வேல்ராஜ், V. முப்புடாதி, குருசாமி, திரவியம், பாலசுப்பிர மணியன், ராம்குமார், நூலகர் மகாஸ்ரீ, கனகராஜ், உட்பட நூலக வாசகர்கள் பள்ளி மாணவ, மாணவியர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.