தஞ்சாவூர் ஜன.23.
தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் பேராசிரியர் அப்துல் ரஹ்மானின் ஆமைகளின் சுற்றுச்சூழல் உயிரியல் நூல் வெளியீட்டு விழா நடந்தது.
மருது பாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார் கல்லூரி முதல்வர் விஜயா முன்னிலை வகித்தார் துணை முதல்வர் தங்கராஜ் அனைவரை யும் வரவேற்றார் .தஞ்சாவூர் எம்.பி முரசொலி நூலை வெளியிட்டார்.
திருவையாறு எம் எல் ஏ துரை சந்திரசேகரன் முதல் பிரதியை பெற்று கொண்டார்
விழாவில் அப்துல் ரஹ்மான் பேசினார். கல்வியல் கல்லூரி முதல்வர் சுப்ரமணியன் வாழ்த்துரையும், நிறைவாக தமிழ் துறை தலைவர் வெற்றிவேல் நன்றி கூறினார்.