தருமபுரி செப் 30
தருமபுரி அடுத்த குண்டலபட்டியில் உள்ள வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் டாக்டர். அ. வசந்தகுமார் எழுதிய என்னை செதுக்குபவர்கள் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பெருமாள் தலைமை தாங்கினார். வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரி செயலாளர் மாதவன் முன்னிலை வகித்தார். ஜார்கண்ட் மாநில உயர்நீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகம் முதன்மை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு என்னை செதுக்குபவர்கள் நூலை வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை வருவான் வடிவேலன் கல்லூரியின் நிறுவனர் வடிவேலன் பெற்றுக் கொண்டார். சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்தியத் தமிழ் சங்கத்தின் தலைவர் ஆவடி குமார் கலந்து கொண்டார். விழாவில் பேசிய நிதியரசர் கற்பக விநாயகம் மாணவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியுடன் தமது எதிர்கால குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும், மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக செதுக்கும்சிற்பியாக என்னை செதுக்குபவர்கள் நூல் இருக்கிறது என்று குறிப்பிட்டார். சிறந்த கல்வி அறிவுடன் ஒழுக்கமான மாணவர்களை உருவாக்குவதில் வருவான் வடிவேலன்கல்லூரி முன்னுதாரணமாக இருக்கிறது என்று பாராட்டினார் .இந் நூலின் ஆசிரியர் அ.வசந்தகுமார் நூலாக் க அனுபவ உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை ஜோதிலதா தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு அரசு தலைமை செயலாளர் சட்டத்துறை உள்பயிற்சியாளர் வழக்கறிஞர் அருணா ராகவி நூல் மதிப்புரை செய்தார்.கல்லூரியின் நிறுவனர் வடிவேலன் நன்றியுரை ஆற்றினார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் சிவக்குமார் வெகு சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.