நாகர்கோவில் ஜூலை 24
குமரி மாவட்டம் குமாரபுரம் அருகே வசித்தவர் சனில் (42). தொழிலாளியான இவருக்கு லிசா என்ற மனைவியும் 8 வயதில் ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.
சனிலுக்கு மதுகுடிக்கும் பழக்கமும், புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர், மது குடித்து விட்டு மனைவியோடு அடிக்கடி சண்டையிட்டு வந்த நிலையில், மனைவி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு மகளுடன் அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.அதன் பிறகு கிடைக்கும் பணத்தைக் கொண்டு மது அருந்தி விட்டு வீட்டில் தனியாக சனில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று உறவினர் ஒருவர் சனிலை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால், சனில் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், சனில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது முன்பக்க கதவு பூட்டாமல் இருந்துள்ளது. உடனே அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே கட்டிலில் எரிந்த நிலையில் சனில் சடலமாக கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர், கொற்றிகோடு காவல் துறையினருக்கு தெரிவித்துள்ளார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சனில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து இச்சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.