தேனி மாவட்டம், செப் – 25 தேனி மாவட்டம், உத்தமபாளையம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 30ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு உத்தமபாளையம் நகர தமுமுக சார்பாக பைபாஸில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நகர தலைவர் முகமது அசாரூதீன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யூசுப் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்தினார்
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு.இராமகிருஷ்ணன் எம்எல்ஏ அவர்கள் இரத்ததான முகாமை துவக்கி வைத்து இரத்ததானத்தின் அவசியம் குறித்து உரைற்றினார்கள்
இந்த இரத்ததான முகாமில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன் உத்தமபாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் முகமது அப்துல் காசிம் மக்கா மதினா பள்ளிவாசல் தலைவர் ஹாஜி புரோஸ் கான் உத்தமபாளையம் வட்டார ஜமாஅத்துல் உலமா தலைவர் ஜலீலுர் ரஹ்மான் தமுமுக மருத்துவஅணி மண்டலச் செயலாளர் நிசார்தீன் தேனி தெற்கு மாவட்ட தமுமுக-மமக தலைவர் முகமது ரபீக்
அல் அஜ்ஹர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் நைனார் முகம்மது அல் ஹிக்மா மேல்நிலைப் பள்ளிச் செயலாளர் முகமது சைபுல் இஸ்லாம் உத்தமபாளையம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணைச் செயலாளர் சோ.சுருளி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் இப்ராஹிம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் இல்யாஸ் கபீர், தேனி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணைச் செயலாளர் அபுதாஹிர்,சிங்கப்பூர் மெஸ் உரிமையாளர் முகமது ரபீக், சிபிஐஎம் ஏரியா குழு செயலாளர் சீனிவாசன் தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் மணிவண்ணன் உத்தமபாளையம் பேரூர் மன்ற உறுப்பினர் கமர்தீன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்
தமுமுக மாவட்ட செயலாளர் சிந்தா மதார் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி மாவட்ட பொருளாளர் ஹபீபுல்லாஹ் மாவட்ட துணை செயலாளர்கள் சிராஜ்தீன் முகம்மது ஹனீபா ஹக்கீம் மாவட்ட அணி நிர்வாகிகள் அணீஸ் அஹமது நியாஸ் அஹமது ஹக்கீம் ராஜா முகம்மது, முன்னாள் ஒன்றிய செயலாளர் முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
உத்தமபாளையம் நகர தமுமுக செயலாளர் தாவீத் ஒலி துணை தலைவர் அப்பாஸ் மந்திரி நகர துணைச் செயலாளர்கள் சையது அமீன் சையது முகமது மருத்துவஅணி செயலாளர் ஷேக் இஸ்மாயில் நகர நிர்வாகிகள் நவித் இம்ரான் முகமது நவீத் முபாரக் ஷாஜகான் முகமது அனஸ் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்
நகர பொருளாளர் முகமது ஆசிப் அவர்கள் நன்றியுரை கூறினார் இரத்ததான முகாமில் 61 நபர்கள் இரத்ததானம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது