நாகர்கோவில் செப் 9
குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியில் வைத்து ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன் சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது. நடைபெற்ற ரத்த தான முகாமில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர். நடைபெற்ற நிகழ்வில் ரோட்டரி கிளப் ஆப் நாகர்கோவில் எவர்கிரீன் நிர்வாகிகள் ரொட்டேரியன் பி. எச். எப். தமிழ்செல்வி, சுபா செந்தில், ஸ்ரீதேவி பிரின்ஸ் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். பேரிடர் காலங்களில் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு ரத்ததான முகாம்களை நடத்திய சமூக சேவகர்- தி.கோ. நாகேந்திரன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இரத்த தான நடைமுறைகளை மருத்துவர்கள் எஸ்.சினேகா, ஆர் .ஷெரின் அஸ்மிதா மற்றும் செவிலியர்கள் பி. பிரபாஜா ,எஸ் .நிஷா ஆகியோர் மேற்கொண்டனர்.
கவுன்சிலர் எஸ். சிவகுமார், உதவியாளர் எஸ். சிவகார்த்திகேயன் ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
ரத்ததான முகாமில் மருத்துவர் நாகேந்திரன் பேசும்போது கூறியதாவது:- புத்தர் கூறியது போல இரத்தம் என்பது எல்லோருக்கும் பல பிரிவுகளும் உட்பிரிவுகளும் கொண்டதாக இருந்தாலும் சிகப்பு நிறம் தான். எனவே நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தினர் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. ஆகவே நாம் ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்தி இரக்கத்தோடு நம்மில் ஒருவர் பாதிப்படையும் போது அவருக்காக எந்த வேறுபாடும் இன்றி ரத்ததானம் செய்வது தானத்தில் சிறந்த தானம் ஆகும். அதுபோல் இன்றைய தினம் இரத்த தான முகாம் நடத்துவதற்கு சிறப்பாக வழி வகுத்து தந்த கல்லூரி முதல்வர் மருத்துவர் .லியோ டேவிட், மரு. ஜோசப்சென், மரு. விஜயலட்சுமி ரெனிமோள் , மரு. கிங்ஸ்லி ஜெப சிங் , மரு. ஆர். கே. ராகேஷ் ஆகியோர்களுக்கும் நன்றியை தெரிவித்து இந்த ரத்த தான முகாம் சிறப்பாக அமைய தங்களுடைய ரத்தத்தை தானமாக வழங்கிய உங்களுக்கு என் நன்றியைை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். நடைபெற்ற நிகழ்வில் ஊர் தலைவர். ஏ.ஆர். கென்னடி, வழக்கறிஞர் ஏ.டென்னிஸ் மெர்லின் , ஜஸ்டிஸ் மில்டன், ராணி ஆகியோர் இருந்தனர். இறுதியாக இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ் கொடுத்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.