ஆம்பூர், ஜுன்.16-
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கைலாசகிரி ஊராட்சி பள்ளித்தெரு பகுதியில் தனியார் ஆடை வடிவமைப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. குருதிக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் குருதி கொடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர். மாவட்ட சுகாதார அலுவலர் சித்திர சேனா தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தொழிற்சாலையின் அலுவலர்கள் விஜய் , முருகன்,வட்டார மருத்துவ அலுவலர். தரணீஷ்வரி.இரத்த வங்கி மருத்துவ அலுவலர் கார்த்திகேயன்,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் – ரஷீத். இரத்த வங்கி பொறுப்பாளர் சிலம்பரசன், சுகாதார ஆய்வாளர் பிரேம்குமார், கிராம செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். தானாக முன்வந்து இரத்த தானம் செய்த தொழிலாளர்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலர் சித்திர சேனா சான்றிதழ்கள் வழங்கினார். இரத்ததான நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.