அனுப்பர்பாளையம், ஏப்.5-
இந்தியாவில் பா.ஜனதா தொடர்ந்து ஆட்சி செய்வது இந்திய இறையாண்மை மற்றும் கூட்டாட்சிக்கு ஆபத்தானது என்று தி.மு.க. வடக்கு மாவட்ட செயலா ளர் மேயர் தினேஷ்குமார் கூறினார்.தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செய லாளரும், மாநகராட்சி மேயருமான ந.தினேஷ்குமார் நேற்று கட்சி அலுவல கத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-கூட்டாட்சிக்கு ஆபத்தானதுதொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்கள் பாதிக்கப்படும் வகை யில் மத்தியபா.ஜனதா அரசு சதித்திட்டம் தயார் செய்து வரு கிறது. தமிழ்நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண் ணிக்கை 39-ல் இருந்து 31-ஆக குறையும். இது மக்களை பிள வுப்படுத்துவதற்கான பா.ஜனதாவின் சதியாகும். பாராளுமன்றத் தில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, வடஇந்தியாவில் மக் கள் பிரதிநிதித்துவத்தில் குறைபாடு ஏற்படுவதாக கூறினார். அப்படி என்றால் வடஇந்தியா, தென்இந்தியா என்று மக்களை பிளவுப்படுத்தி ஆட்சியில் அமர பா.ஜனதா தயாராகி வருகிறது.
இந்த பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் வலியுறுத் திய நிலையில், அதைப்பற்றி பேசுவதற்கு கூட பா.ஜனதா தயா ராக இல்லை. வக்பு சட்ட மசோதா தாக்கல் செய்தது கூட இஸ் லாமியர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்துவதாக அமைந்துள் ளது. இது கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் பா.ஜனதா தொடர்ந்து ஆட்சி செய்வது இந்திய இறையாண்மைக்கு, கூட் டாட்சிக்கு ஆபத்தானதாகும்.
மத்திய அரசு வஞ்சிக்கிறது
பா.ஜனதா பலமாக, ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தொகுதி மறுவரையறை என்ற பெயரில் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ஆட்சியமைக்க பா.ஜ.க. திட்டம் தீட்டி வருகிறது. நிதி பகிர்விலும் தமிழ்நாடு உள்பட பா.ஜனதா. அல்லாத மாநி லங்களை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்கப் பட வேண்டிய ரூ.4034 கோடியை உடனடியாக விடுவிக்க வேண் டும் என்று தி.மு.க. சார்பில் கடந்த வாரம் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் நிதியை மத்திய அரசிடம் இருந்து போராடி பெறவேண்டிய நிலைதான் உள்ளது. இது தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாதிக் கும். எனவேதான் தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும் என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள் ளார்.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை பொறுத்தவரை விடுபட்ட பகு திகளுக்கும் அந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். திருப்பூர் மாநகராட்சியில் மட்டும் வரிஉயர்வு செய்யப்படவில்லை. வரிஉ யர்வு என்பது தமிழ்நாடு முழுவதும் ஒரே உயர்வுதான். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, சிறப்பு தீர்மானம் நிறைவேற் றப்பட்டு அரசின் கவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட அவைத்த லைவர் நடராஜன், வடக்கு மாநகர செயலாளர் ஈ.தங்கராஜ், பகுதி செயலாளர்கள் கொ.ராமதாஸ், மின்னல் நாகராஜ், ஜோதி, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார்காலனி எம்.எஸ்.மணி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணைத்தலை வர்வி.வி.ஜி.காந்தி உள்பட பலர் உடனிருந்தனர்