ஜூன் 23
தமிழ் நாட்டில் கள்ளச் சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறியதால் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் தற்போது வரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உயிர் இழப்பிற்கு காரணமான கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய தமிழக அரசைக் கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும், கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில், மாவட்ட பொருளாளர் டாக்டர் முத்துராமன் முன்னிலையில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 300 – க்கும் மேற்ப்பாட்ட பாஜக வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் தற்போது வரை 58 பேர் பலியான துயர சம்பவம் தமிழ் நாட்டில் அரங்கேறி உள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஆண்டு விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிர் இழந்தனர். இதனால் கள்ளச்சாரயத்திற்கு பலியான குடும்பங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எதிர்கால வழி தெரியாமல் தத்தளிக்கிறார்கள். இந்த துயர நிலை ஏற்படுவதற்கு காரணமானவர்கள் யார்? அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் முதலமைச்சர் முக ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடு பட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். ,
ஆர்ப்பாட்டம் தொடங்கியபோது கோஷங்களை எழுப்பி கண்டனத்தை தெரிவித்த பாஜகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது தக்கலை காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்ட காரர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து வாகனத்தில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்திற்க்கு அழைத்து சென்றனர்.