பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு கர்ம வீரர் காமராஜர் 122 வது பிறந்த நாள் விழா பாஜக நகர தலைவர் ஆர்.கே. கணேசன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் பி.கே.சிவா முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சர்க்கரை ஆலை முன்பு உள்ள காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி காமாராஜருக்கு புகழாரம் சூட்டினர்.
அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் டைகர் சிவா, நகர இளைஞர் அணி தலைவர் ஜயப்பன், நிர்வாகிகள் சுரேஷ், கண்ணன் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.