கிருஷ்ணகிரி ஜன 14: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக அலுவலகம் அமைந்துள்ள குந்தாரபள்ளி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு நடத்தபட்டது. புதுப்பானை வைத்து பச்சரிசி, வெல்லம், பூசணிக்காய், தானியங்கள், கரும்பு உடன் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த பட்டது. பொங்கி வரும் போது பொங்கலோ பொங்கல் தைப் பொங்கல் என்று கோசங்களை எழுப்பினர். இந்து, கிறிஸ்துவ, இசுலாமிய சகோதரர்கள் உடன் பொங்கல் வைத்து பின்னர் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேசிய வக்ஃபு வாரிய துணை தலைவர் முணவரிபேகம், மாவட்ட தலைவர் சிவபிரகாஷ், பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், பொருளாளர் கவியரசு, நகர தலைவர் விமலா, ஒன்றிய தலைவர்கள் ராஜேஸ்வரி, சுகந்தி, சக்தி, குமார், பழனி, பாலாஜி, பாஜக பிரமுகர் மருதேரி கோபாலகிருஷ்ணன், அரசு பிரிவு மாவட்ட துணைத் தலைவர் கார்த்தி உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பட விளக்கம்: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், மாவட்ட பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.