அஞ்சுகிராமம் மார்ச்-29
ஒன்றிய அரசு கடந்த நான்கரை மாதங்களாக தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காதது குறித்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அதற்கு எவ்வித பதிலையும் தராமலும் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.4034 கோடி அளவுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை வழங்காமலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அனைத்து கழக ஒன்றியங்களிலும் தலா இரண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களில் 100 நாள் வேலைவாய்ப்பால் பயன்பெறுவோரைத் திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றியம் சார்பில் மயிலாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன்
தலைமை தாங்கினார் .
பேரூர் செயலாளர்கள் மயிலாடி டாக்டர் சுதாகர், மருங்கூர் மகேஷ், அழகை ஐயப்பன், தேரூர் முத்து, அஞ்சை இளங்கோ, அஞ்சுகிராமம் பேருராட்சி துணை தலைவர் காந்திராஜ்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் மகேஷ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மேலும் மாநில நிர்வாகிகள் தில்லை செல்வம், பிரபா ஜி. ராமகிருஷ்ணன் முன்னாள் ஊராட்சி பஞ்- தலைவர்கள் சோமு, நீலா ராமசாமி, குலசேகரபுரம் பஞ்- துணை தலைவர் வாத்தியார் மாணிக்கராஜ், திமுக பிரமுகர்கள்.சதீஷ், கவிதன், அன்ன சுமதி சுதாகர், ராஜகோபல், ஹரிகிருஷ்ணபெருமாள், அய்யா சிவக்குமார், சுபி, விக்டர் நவாஸ், ஸ்டார்வின் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் – நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.