நாகர்கோவில் நவ18
நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலரும், பா.ஜ.க பொருளாதார பிரிவு மாவட்ட தலைவருமான ற்றி. அய்யப்பன் பிறந்தநாள் விழா நேற்று மனோலயா மனநோயாளிகள் காப்பகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
விழாவில் பங்கேற்ற அய்யப்பன் கேக் வெட்டி மன நோயாளிகளுக்கு வழங்கினார். பின்னர் மன நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க தலைவர் சுயம்பு,தாமரை துரையரசன்,சந்திரசேகர், ஒன்றிய துணைத் தலைவர்கள் ராஜன், ரெஜிகுமார், பேரூர் பா.ஜ.க தலைவர்கள் ஜெயானந்த், பாரத், பாபு, ஆனந்த்,வர்த்தக பிரிவு ஒன்றிய செயலாளர் செல்வ சுப்பிரமணியன், கரும்பாட்டூர் ஊராட்சி பா.ஜ.க தலைவர் ராஜேஷ், கணேஷ் பேரூர் தலைவர் சுசீந்திரம், கனகராஜ் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய துணை தலைவர் உட்பட பா.ஜ.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.