ஏப்ரல்: 15
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்
.கே. சுப்பராயன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர்
க. செல்வராஜ் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஆர் .கிருஷ்ணன் மேயர் ந.தினேஷ்குமார்
டி.கே.டி. நாகராஜன் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர்
கலீல் ஹாஜியார்
சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி.முகமது யஹ்யா தாவூதி ஹஜ்ரத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக கண்டன உரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் , ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள வக்ஃபு திருத்தச் சட்டம் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமைகளுக்கும்,தனி மனித உரிமைகளுக்கும் எதிரானது. இச்சட்டத்தை கொண்டு வந்ததற்கு ஒன்றிய அரசு கூறும் காரணங்கள் ஏற்கத்தக்கவை அல்ல. சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து ஓரவஞ்சனையோடு சட்டங்களை இயற்றி வரும் ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு சட்டமன்றத்தில் வக்ஃபு திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்நாடு அரசுக்கும் , தமிழ்நாடு முதலமைச்சர்.
மு.க. ஸ்டாலினுக்கும் தீர்மானத்தை ஆதரித்த எதிர்க்கட்சிகளுக்கும் உள்ளங்கனிந்த நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். தீர்மானத்தை பாஜக அல்லாத எல்லா கட்சிகளும் ஆதரித்துள்ளதன் மூலம் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி இந்தியாவுக்கே தமிழ்நாடு வழிகாட்டி இருக்கிறது. தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை கெடுத்து , சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் தீய சக்திகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு பிரிவு ஒன்றை மாநில அரசு அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.