மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் மயிலாடுதுறை அன்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் காலை உணவு வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கிட்டப்பா அங்காடி முன்பும், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனை முன்பும் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி பாமகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்ட தலைவர் பழனிச்சாமி, தஞ்சை மண்டல பொறுப்பாளர் அய்யப்பன், மாவட்ட பொருளாளர் தேவி குருசெந்தில், வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்கஅய்யாசாமி, மாவட்ட துணைத் தலைவர் குமார், நகரத் தலைவர் குமரேசன், நகர மன்ற உறுப்பினர் செந்தில்,உள்ளிட்ட பாமக மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.