கிருஷ்ணகிரி,ஜூன்.20-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா ஊத்தங்கரை ரவுண்டானாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எம்.குமரேசன் தலைமையில் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடினர். நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர்கள் ரவிச்சந்திரன், திருமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் கலந்துகொண்டு கேக் வெட்டி இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கினார். இதை தொடர்ந்து ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பிரட் பிஸ்கட் வழங்கப்பட்டது. முன்னதாக ராஜீவ் காந்தி, காமராசர், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் காங்கிரஸ் கட்சியில் மாநில செயலாளர் ஜெ.எஸ். ஆறுமுகம், எம்.சி.ரகு, காங்கிரஸ் நிர்வாகிகள் குமரவேல், நாராயண மூர்த்தி, விசிக மாவட்ட செயலாளர் குபேந்திரன், அசோகன்,தொகுதி செயலாளர் வழக்கறிஞர் சங்கதமிழ்சரவணன்,
முன்னாள் பேரூராட்சி தலைவர் எஸ். பூபதி, சொக்கநாதன், அஹமத் பாஷா, பட்டாபி, பாலகிருஷ்ணன், முத்து விஜயகுமார், அயோத்தி, இளையராஜா, அண்ணாதுரை, கணபதி, தனஞ்செயன், கிருஷ்ணன். வடிவேல் ,பொன்னன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக பூக்கடை மகி நன்றி கூறினார்.