மதுரை ஜூலை 29,
மதுரை மாவட்டத்தில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து ஊமச்சிகுளம் அரசு தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மதுரை சில்ட்ரன் சார் டபுள் ட்ரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளரான பள்ளியின் தலைமை ஆசிரியை அகிலா பாலகிருஷ்ணன் கர்மவீரர் காமராஜரை குறித்து பல கருத்துக்களையும் அவர் செய்த தொண்டுகளையும் கல்விக்கு அவர் செய்த அற்புதங்களையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் வைத்து, அதில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்தினர். நிகழ்ச்சியின் இறுதியாக ஆசிரியை ராம லக்ஷ்மி
நன்றியுரை வழங்கினார்.