தூத்துக்குடியில் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு கனிமொழி எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வ.உ.சி. மார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்