ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில், பயோமெடிக்கல் என்ஜினியரிங் துறை
இந்திய பயோமெடிக்கல் இன்ஜினியரிங் சொசைட்டி (பிஎம்இஎஸ்ஐ) சேப்டரின் துவக்க விழா வேந்தர்.முனைவர்கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
இணைவேந்தர் டாக்டர்.எஸ்.அறிவழகி, துணைத் தலைவர்கள்
டாக்டர்.எஸ்.சசி ஆனந்த், டாக்டர்.எஸ்.அர்ஜுன் கலசலிங்கம், துணைவேந்தர் டாக்டர்.எஸ்.நாராயணன், பதிவாளர் டாக்டர்.வி.வாசுதேவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கலசலிங்கம் மருத்துவமனை டீன் டாக்டர் ஷெர்லி ஜோசப், சேப்டரை துவக்கி வைத்து, இந்த சேப்டர் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். முனைவர் எஸ்.சக்திவேல் வரவேற்றார்.துறைத் தலைவர் டாக்டர் டி. அருண் பிரசாத், சேப்டரின் செயல்பாட்டுத் திட்டத்தை விவரித்தார்.
டீன், பி. சிவக்குமார், இயக்குநர் எம். பள்ளிகொண்டா ராஜசேகரன், டாக்டர் ஜோசப் ஆகியோர் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவ துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து பேசினர்.
டாக்டர் என்.செல்லி தேவி, சேப்டரின் தொலைநோக்கு மற்றும் நோக்கங்கள் குறித்து பேசினார்.
பேராசிரியர் எஸ்.காளிமுத்துக்குமார் நன்றி கூறினார்.