சேலம் மாநகரத்தில் உள்ள நீரோ பவுண்டேஷன் மருத்துவமனையின் மனநலத்துறை மற்றும் சாமுண்டி என்பீல்ட் உடன் இணைந்து நடத்தும் இருசக்கர வாகனப் பேரணி, நீரோ பவுண்டேஷன் மருத்துவமனை முன்பு நடைபெற்றது. இதை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரியின் முதல்வர் மருத்துவர் மணிகாந்தன்,நீரோ பவுண்டேஷன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் நடராஜன் ஆகியோர் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.
மருத்துவமனையின் மனநலத் துறைத் தலைவர் மருத்துவர் ஸ்ரீதர் உலக மனநல தினத்தின் மையப்பொருளான “பணியிடத்தில் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்பதை பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். இந்தப் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே மனநலம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் நடைபெற்றது. இப்பேரணி நீரோ பவுண்டேஷன் மருத்துவமனை மூன்று ரோட்டில் தொடங்கி மேட்டூர் பூங்காவில் முடிவு பெற்றது. மேட்டூர் பூங்காவில் மேட்டூர் துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கிய ராஜ்,பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.மேலும் சிறப்பு விருந்தினர் சந்திரமோகன் BDS, மேட்டூர் ரோட்டரி கிளப்பின் சார்பாக அனைவருக்கும் பதக்கம் அனுவித்து அனைவரையும் கௌரவித்தார்.