தக்கலை, டிச- 4
தக்கலை அருகே மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் செஜின் குமார் ( 20 ). காய்கறி வியாபாரம் செய்து வந்தார். கடந்த 23ஆம் தேதி அழகியமண்டபத்தில் இருந்து திருவட்டாறு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அழகியமண்டபம் தனியார் பள்ளி அருகே செல்லும்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று பைக் மீது மோதியதில் செஜின் குமார் தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ளவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று (3-ம் தேதி) காலை செஜின்குமார் உயிரிழந்தார். தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.