திருமங்கலம் ஜூன் 23-
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கள்ளக்குறிச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து 50 க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தில் தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்து மதுரை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் திருமங்கலம் ராஜாஜி சிலை அருகே மாவட்டத் தலைவர் சசிகுமார் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், தரவு மேலாண்மை பிரிவு மாநில துணைத்தலைவர் வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட பொதுச் செயலாளர்கள் பாரதிராஜா சிவலிங்கம் மாவட்டத் துணைத் தலைவர் சரவணகுமார் நகரத் தலைவர் விஜயேந்திரன் மாவட்ட செயலாளர்கள் சின்னசாமி ராக்கப்பன் ஜெயக்குமார்
ஓ பி சி அணி மாவட்ட தலைவர் வேல்முருகன் பொருளாதார பிரிவு மாநில செயலாளர் நிரஞ்சன், அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு மாவட்ட தலைவர் சோமசுந்தரம் துணைத்தலைவர் பாலமுருகன் வக்கீல் கிருஷ்ணன் உள்ளிட்ட 142 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மஹாலில் தங்க வைக்கப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர்.