ராஜகமங்கலம் ஜனவரி 6
பதவி இல்லாமல் இருந்தாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்வேன் இராஜாங்க மங்கலம் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் வழக்கறிஞர் சரவணன் தனது ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பதவி காலம் நிறைவடைந்த தினத்தில் தன்னை தேர்வு செய்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து உறுதி கூறியதாவது:-
இராஜாங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய பொதுமக்களுக்கு வணக்கம்
நமது ஊராட்சியில் உங்கள் பேராதரவுடன் ஜந்து ஆண்டுகளாக இராஜாங்க மங்கலம் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவராக உங்களால் தேர்வு செய்ய பட்டேன்.
நல்ல முறையில் அரசியல் பாகுபாடு இன்றி அனைத்து மக்களும் பயன்பெரும் வகையில் பணியாற்றி வந்தேன். நமது ஊராட்சியில் அனைத்து கிராமங்ககளில் உள்ள பொதுமக்கள் பயன் பெரும் வகையில் பணிகள் செய்து உள்ளேன்,, எனது பதவிகாலம் இன்றுடன் முடிவடைகிறது
பதவி இல்லாமல் இருந்தாலும் தொடர்ந்து மக்கள் பணி செய்வேன்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எனக்கு ஆதரவு அளித்த நமது ஊராட்சி ஒன்றிய பொதுமக்களுக்கு அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் தொடர்ந்து
மக்கள் பணி செய்வேன் என தெரிவித்தார்.