மத்தூர் ஒன்றியத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் ரூபாய் 5 கோடி 88 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது , இந்நிகழ்ச்சியில் அதிமுக ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி.எம் தமிழ்செல்வம், பர்கூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிடம் கட்டுவதற்கான வேலையை துவக்கி வைத்தனர். இநிகழ்ச்சி ஒன்றியகுழு பெருந்தலைவர் விஜியலட்சுமி பெருமாள் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் செந்தில், மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இதைதொடர்ந்து நாகம்பட்டி ஊராட்சியில் ரூபாய் 107.5 இலட்சம் மதிப்பீட்டில், சிவம்பட்டி ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா, ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் நிழல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையும் தே.மதியழகன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கதிரவன், ஒன்றிய செயலாளர்கள் குண.வசந்தரசு, நரசிம்மன், எக்கூர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட கவுன்சிலர் சங்கர், மாவட்ட மருத்துவரணி துணைத் தலைவர் தென்னரசு, ஒன்றிய கவுன்சிலர் ஜீவானந்தம்,
ஒப்பந்ததாரரும் நெசவாளர் அணி துணை அமைப்பாளருமான அழகேசன்,
ஊராட்சி மன்ற தலைவர்கள் மீனா சக்தி, செல்வி கதிர்வேல், மனோகரன், பூபதி, சந்தோஷ்குமார், அன்பு, ஜெகதீசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் உதயகுமார்,
உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.