சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சியில் சந்தைப்பேட்டை வளாகத்தில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாரச்சந்தை கூடாரம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டன. நிகழ்வில் மல்லூர் பேரூராட்சி துணை சேர்மன் வேங்கை அய்யனார் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சேலம் திமுக கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.மேலும் நிகழ்வில் சேர்மன் லதா, கவுன்சிலர்கள் சந்திரா,செல்வம்மாள்,
மோகனா, கலைச்செல்வி, பெருமாள், பழனிச்சாமி,மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.