விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு டிச.9- பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிக ரித்ததால் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
தென்னிந்தியாவின் மிகப் பெரிய மண் அணை என்ற பெருமையும் தமிழகத்தின் பெரிய அணை என்ற பெருமையும் கொண்டது பவானிசாகர் அணை ஆகும். இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி.
அணையில் இருந்து கீழ்ப வானி வாய்க்காலில் திறக்கப் | படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர்
மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறு கின்றன. இதேபோல் பவானி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீ ரால் தடப்பள்ளி, அரக்கன் கோட்டை மற்றும் காலிங்க ராயன் வாய்க்கால் பகுதியை சேர்ந்த 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக் கிய குடிநீர் ஆதாரமாகவும் பவானிசாகர் அணை விளங் குகிறது.
கடந்த ஆண்டு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் அணைக்கு தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. அதே சம யம் பாசனத்துக்காக தண்
ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் மிக வும் குறைந்து 50 அடியை |தொடும் நிலைக்கு வந்து விட் டது. இந்த நிலையில் அணை யின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பருவ மழை பெய்ததால் அணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து அணையின் நீர்மட்டம் வெகு வாக உயர தொடங்கியது.
இதனால் அணையின் நீர் மட்டம் 99 அடியாக உயர்ந்தது. அப்போது அணைக்கு வினாடிக்கு 3 ஆயி ரத்து 892 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் மட் டும் பாசனத்துக்காக வினா டிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குவதால் விவ சாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.