திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் (அன்னை அகாடமி) தனியார் தொண்டு அமைப்பின் சார்பில் தாலுகா அளவிலான ஏழை எளிய பள்ளி குழந்தைகளுக்கு கல்வியை வழங்குவதில் சிறப்பாக செயலாற்றிய சிறந்த அரசு பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களை பாராட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பிச்சைநாதன் தலைமை வகித்தார்,கல்வி புரவலர் ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மருத்துவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்,திட்ட இயக்குனர் காசிமாயன் வரவேற்றார், அதனைத் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிவரும் 11-ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்ப்பட்டு காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் காளிமுத்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாலைநேர கல்லூரி பேராசிரியர் மகேந்திரபாண்டியன் ஆகியோரால் பாராட்டி கொளரவித்து சிறந்த ஆசான் விருது மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியின் போது மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து
கொண்டனர்.