கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா கோவில்பட்டி நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார் நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ராணி வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினரும் எஸ்.எம்.சி உறுப்பினருமான எம்.ஆர்.வி.கவியரசன் கலந்து கொண்டு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார் விழாவில் நகர் மன்ற உறுப்பினர் சண்முகராஜ் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாஸ்கரன், வட்டாரக் கல்வி அலுவலர் பத்மாவதி, ஆசிரியைகள் இசக்கிமீனா, மகேஸ்வரி, சீனியம்மாள், உமாதேவி, இந்திராகாந்தி, சாவித்திரி, குணவதி, பராசக்தி, சுமதி, சந்தியா, லெட்சுமி, ஷைனாஸ்பேகம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சோபனா, துணைத் தலைவர் பெமினா பியாரி, பெற்றார் ஆசிரியர் கழக தலைவர் சாந்தி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர், பெற்றார்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் ஆசிரியை ஜெயசுதா நன்றி தெரிவித்தார்.