தருமபுரி மாவட்ட பாரத வெண்புறா மக்கள் சேவை இயக்கம் சார்பில் 35 -ஆம் ஆண்டு விழா டி.பி. ராதாகிருஷ்ணன் மாவட்ட தலைவர் அவர்கள் தலைமையில் தருமபுரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வரவேற்புரை ஆர். சண்முகம் மாவட்ட செயலாளர், முன்னிலை முனியம்மாள் கோலாட்ட கலை குழு, க.கூன் மாரி துணைத் தலைவர்,எம். பாண்டியன் துணைச் செயலாளர், கலை ழுதுமணி விருது பெற்ற ஆலமரத்துப்பட்டி பி. காளியப்பன், தாண்டா கவுண்டன் புதூர் ஆர். அய்ய முத்து மற்றும் பல்வேறு துறைகளில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு பாராட்டு நற்சான்றிதள் வழங்கி கலை மாமணி ஏ. கே. பி. கதிர்வேல் தலைவர் சிறப்பிரையாற்றினார். பாரத வெண்புறா மக்கள் சேவை இயக்கம் சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஆர். ராமகிருஷ்ணன் சிக்கம்பட்டி நன்றி உரையாற்றினார். தீர்மானத்தில் கூறியிருப்பதாவது நலிந்த கலைஞர் ஓய்வூதிய தொகையை 5,000 ஆக உயர்த்தி தரவும், இயற்கை மரணம் மற்றும் விபத்துக்கள் மூலம் இறக்கும் கலைஞர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
பாரத வெண்புறா மக்கள் சேவை இயக்கம்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics