வேலூர்=30
வேலூர் மாவட்டம் ,பகவான் மகாவீர் தயாநிகேதன் ஜெயின் பள்ளியில் பயிலும் மாணவன் சாதனை. 17.10.24 முதல் 22.10.24 வரை ஜார்ஜியாவில் இண்டர்நேஷனல் உஷ போட்டி நடைபெற்றது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து 22 பேர் கலந்து கொண்டனர். மினிஸ்ட்ரி ஆப் யூத் அப்பேர்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ், கவர்மெண்ட் ஆப் இந்தியா ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா அங்கீகாரம் பெற்ற உஷு விளையாட்டு போட்டியில், தமிழ்நாட்டின் சார்பாக, மாஸ்டர் ஆர். ஆத்திஷ்ராஜ் கலந்து கொண்டு 2 வெள்ளி பதக்கமும், 1 வெண்கல பதக்கமும் வென்று நாட்டிற்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பள்ளியின் செயலாளர் ஸ்ரீ.கே.ராஜேஷ்குமார் ஜெயின் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பள்ளியின் முதல்வர் .எம்.மாலதி, பள்ளியின் கல்வி ஆலோசகர் . ஆர்.கீதா அவர்களும் மாணவனை பாராட்டி ஊக்கப்படுத்தினர்.