நாகர்கோவில் செப் 4
அய்யா வைகுண்டர் வாலிபால் கிளப் சார்பில் நடத்தப்படும் மாநில அளவிலான வாலிபால் போட்டிகளை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்ததது மற்றும் தனது சொந்த நிதியில் பல்வேறு சமூகப் பணிகள் செய்து வரும் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளையின் கூடுதல் பொதுச் செயலாளர் ராஜ சத்தியசேகருக்கு நேற்று சாமிதோப்பு தலைமை பதி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த சாதனையாளர் விருது வழங்கப்பட்டது .விருதினை சாமிதோப்பு தலைமைபதி குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் வழங்கினார்.