சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் எம்ஜிஆர் நகர் 1வது வார்டு பகுதி மக்கள் சுமார் 50 ஆண்டுகளாக அந்த பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
இதில் 120 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தலைமையில் நேரடியாக இடத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
மேற்கண்ட இடத்திற்கு
பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் அப்போது (2020. ல்) புகார் சென்றது உடனடியாக தாசில்தாருக்கு உத்தரவிட்டு அந்த இடத்திற்கு ஆய்வு செய்து பட்டா கொடுப்பதற்கு தாசில்தாரிடம் அறிக்கை கேட்டனர். இடத்தை ஆய்வு செய்து வரைபடம் தயாரித்துவிட்டு 120 பேருக்கு பட்டா கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தனர் அது நிலுவையில் உள்ளதாகவும்
அதனைத்
தொடர்ந்து பட்டா கேட்டு போராடியும் முறையிட்டும் வந்தனர் இதுவரை எம்ஜிஆர் நகர் வார்டு மக்களுக்கு பட்டா வழங்கவில்லை மீண்டும் வருவாய்த் துறையிடம் பட்டா கேட்டால் இது தேவஸ்தானத்துக்கு உரிய இடம் என்றும் அவர்களுக்கு தீர்ப்பு ஆகி உள்ளது என்றும் கூறுகின்றனர்.
அரசு சார்பில் மேல்முறையீடு செய்து தேவஸ்தானத்திடம் இருக்கும் இடத்தை மீட்டு எம்ஜிஆர் நகர் மக்களுக்கு பட்டா வழங்க கோரி எம்ஜிஆர் நகரில் இருந்து ஊர்வலமாக 500 க்கும் மேற்பட்ட மக்கள்
ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர் அதன் பின்னர் வருவாய்த்துறையினர் போலீஸ் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் பிரச்சனை குறித்து தகவல் அளிக்கப்படும் என வருவாய்த்துறை கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்
இந்த போராட்டத்தின் காரணமாக சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு
வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.