கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் துரைஸ் திருமணம் மண்டபத்தில் துணி குடேன் மொத்த விற்பனைக்கு சுமார் ரூ. 5 கோடி மதிப்புள்ள ஸ்டாக் வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் அன்று வழக்கமாக அதன் ஓனர் சுமார் 6.30 மணி அளவில் குடோனை மூடும் பொழுது மின்சாரம் எப்போதும் துண்டிக்கப்பட்டு செல்வது வழக்கம். அதேபோல் சம்பவ அன்று மின்சாரத்தின் பீஸ் கேரியர் கழற்றி வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. சம்பவ அன்று இரவு சுமார் 11 மணி அளவில் திடீரென்று குடோன் தீ பற்றி எரிய தொடங்கியது. தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த 32 தீயணைப்பு வண்டிகள் வந்து தீயே அணைத்தனர். அதற்குள் மல மல என்று எரிந்து அனைத்தும் சாம்பலானது. பக்கத்தில் தீ பரவாமல் இருக்க தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். பர்கூர் மிகப்பெரிய தீ விபத்திலிருந்து தப்பித்தது. இதே போல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சமுதாய கூடம் இரவு நேரத்தில் தீ பற்றி எரிந்தது. அதிலிருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல் ஆனது.இரண்டு சாம்பல் தொடர்ந்து பர்கூர் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வருவதால் பர்கூர் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதற்கு யார் காரணம் எதனால் தொடர்ந்து பர்கூர் தீ பற்றி எரிகிறது வருகிறது. என்ற விபரம் தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இது குறித்து போலீசார் சிசிடி கேமராக்களை ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் இந்த சம்பவம் குறித்து விபரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.
பர்கூர் துரைஸ் திருமணம் மண்டபத்தில் துணி குடேன்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics