பொள்ளாச்சி ஜூலை:25
பொள்ளாச்சியின் முக்கிய சாலையான கோவை சாலையில் சேரன் நகர் அருகில் அமைந்துள்ள ஆலமரம் அடியோடு சாய்ந்ததால் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு உள்ளாகியது. மேலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதைத்தொடர்ந்து சேரன் நகர் சுரேஷ் அவர்கள், மின்வாரிய ஊழியர்கள், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள், ஆட்சி பட்டி ஊராட்சி மன்ற ஊழியர்கள் விரைவாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.