திருப்பத்தூர்:செப்:10, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதியூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைப்பெற்றது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.45.91 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மதுரை மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வங்கி கடன் இணைப்புகள் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடங்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் நேரலை நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் YDK திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் 460 மகளிர் குழுக்களை சேர்ந்த 6280 பயனாளிகளுக்கு ரூ. 45.91 கோடி மதிப்பிலான வங்கி கடன் மற்றும் நல திட்ட உதவிகளை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர்.
ஊரக பகுதிகளில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 294 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.32.57 கோடி நேரடி வங்கி கடன், 4 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு ரூ.1.70 கோடி வங்கி பெருங்கடன், 30 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.45 இலட்சம் சமுதாய முதலீட்டு நிதி மற்றும் 15 பயனாளிகளுக்கு ரூ.6 இலட்சம் மதிப்பீட்டிலான வட்டார வணிக வள மையத்தின் தொழில் கடன் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 116 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10.63 கோடி வங்கி நேரடி கடன் 1 பகுதி அளவிலான குழு கூட்டமைப்புக்கு ரூ 50 இலட்சம் வங்கி பெருங்கடன் வழங்கப்பட்டது.திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.கனபதி திட்ட விளக்க உரையினை அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பால் வள துறைத் தலைவர் வழக்கறிஞர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் N.K.R.சூரியகுமார்,ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ்குமார்,கந்திலி ஒன்றிய குழுத் தலைவர் திருமதி , ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆ.மணிமேகலை ஆனந்த குமார், மகளிர் உதவி திட்ட அலுவலர் தே.ஜேம்ஸ் பிரபாகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், மகளிர் திட்டத்தினை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்டனர்.