அரியலூர், டிச.26
அரியலூர் மாவட்ட நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் தனி இட ஓதுக்கீடு வழங்கக் கோரி அரியலூர் அண்ணாசிலை அருகே பாமகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலர் தமிழ்மறவன் தலைமை வகித்தார். மாநில மாணவர் சங்க செயலர் ஆளவந்தார், முன்னாள் மாவட்டச் செயலர் காடுவெட்டி ரவி, அமைப்புச் செயலர் திருமாவளவன், மாநில முன்னாள் துணைத் தலைவர் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்