நாகர்கோவில் ஜூன் 19
தியாகத்திருநாள் என்று அழைக்கப்படும் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகையையோட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. நாகர்கோவில் இடலாகுடியில் உள்ள பாவா காசிம் ஜிம் ஆ பள்ளி வாசலில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட சிறப்பு பக்ரீத் தொழுகை நடைபெற்றது – குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடபட்டது. அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார், இடலாகுடி, லாயம், திட்டுவிளை, தக்கலை. தேங்காய் பட்டிணம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்கள் சென்று சிறப்பு தொழுகைகளில் கலந்து கொண்டனர். நாகர்கோவில் இடலாகுடியில் உள்ள பாவா காசிம் ஜிம் ஆ பள்ளியில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தொழுகை மேற்கொண்டனர். குழந்தைகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.