திருப்பூர், ஆக. 24:
திருப்பூர் காங்கயம் ரோடு சிடிசி கார்னர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் அதிகாரிகள் மற்றும் திருப்பூர் தெற்கு தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பேக்கரியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பேக்கரி உரிமையாளர் மாணிக்கத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து பேக்கரிக்கு சீல் வைத்தனர். மேலும் 30 பாக்கெட்டுகளில் இருந்த 800 கிராம் மதிப்பிலான புகையிலை
பொருட்களை பறிமுதல் செய்து அளித்தனர்.