ராமநாதபுரம், ஜுலை 27-
ராமநாதபுரம் மாவட்டம்
தொண்டியில் ரேலி ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் உறுப்பினர்களுக்கான இறகு பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. விளையாட்டுப் போட்டியில் இருபதுக்கும் மேற்பட்ட அணிகள் விளையாடினர். இப்போட்டியை இஸ்லாமிக் மாதிரி பள்ளி நிர்வாக உறுப்பினர் பஷீர் அகமது, ரேலிஸ் ஸ்போர்ட்ஸ் மேலாளர் அப்துல் கரீம் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் சாதிக் பாட்ஷா, பைசல், தேவேந்திரன், ஜிப்ரிக், பாலா, சேகர் , முத்து, டேனியல், பயாஸ், காமராஜ் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் இந்த போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் முதல் இடம் சதீஷ், ராஜ் இணைந்து பெற்றனர். இரண்டாம் இடம் ஆசீர், அப்துல்லா இணைந்து பெற்றனர். பரிசுகளை தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன் நிர்வாகிகள் சாதிக் பாட்ஷா, பைசல், பேங்க் ஆப் இந்தியா மேலாளர் குதுப்தின் முத்து ஆகியோர் வழங்கினர். எஸ்.எம்.பி. இஸ்சத்தின் நன்றி கூறினார்.