சாரண சாரணியர் இயக்கத்தை உருவாக்கிய பேடன் பவுல் பிறந்த தின விழிப்புணர்வு பேரணி ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்/
சங்கரன்கோவிலில் சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில் போதை விழிப்புணர்வு பெண் குழந்தைகள் வன்கொடுமை குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது விழிப்புணர்வு பேரணியை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார் பேரணி யில் பெண் வன்கொடுமை தடுப்பு போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி சாரண சாரணியர் மாணவ மாணவிகள் திருவேங்கடம் சாலை வழியாக ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பேரணி நிறைவு பெற்றது சாரண சாரணியர் இயக்கத்தை 1857 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ம்நாள் இங்கிலாந்தில் பிறந்த ராபர்ட் பேடன் பபுல் பிரபு 1907 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தையும் 1910இல் சாரணியர் சிறுமியர்கள் இயக்கத்தையும் உருவாக்கினார்
போதை ஒழிப்பு பெண் வன்கொடுமை எதிர்ப்பு இயக்கம் சாரணியர் இயக்கத்தை துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது பேரணியில் சாரண சாரணியர் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் பிரேம்குமார் பொருளாளர் மூக்கையா சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பழனி செல்வம் டவுன் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் ஆசிரியர்கள் சுப்பிரமணியன் சீனி பாண்டி சிவசுப்பிரமணியன் வேணுகோபாலகிருஷ்ணன் திமுக நகர செயலாளர் பிரகாஷ் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் மற்றும் பல்வேறுபள்ளி களை சார்ந்த சாரண சாரணியர் மாணவ மாணவியர்கள் 200க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.