ஊட்டி. டிச. 23
சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்கள் முழங்க ஐயப்ப பக்தர்கள் ஆடிபாடி பூ குண்டம் இறங்கி வழிபாடு நடத்தினர்.
30க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விரதம் இருந்து குண்டம் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அடுத்த சாந்தூர் பகுதியில் 50 வது ஆண்டு பூ குண்டம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது
அகில பாரத ஐயப்பன் சேவா சங்கம் சாந்தூர் கிளை சார்பாக ஐம்பதாவது ஆண்டு பூ குண்டம் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது காலை முதலே சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜை உடன் துவங்கிய நிகழ்ச்சி மதியம் அன்னதானத்துடன் ஐயப்பனின் திருவீதி உலா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில்30க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு விரதம் இருந்து பூ குண்டம் இறங்கி ஐயப்பனை வணங்கி சென்றனர்.