மதுரை ஜூன் 24,
மதுரையில் ஆயுஷ் 2024 பாரம்பரிய மருத்துவ கண்காட்சி மதுரை மடீட்சியா மற்றும் தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் சார்பில் மதுரை மடீட்சியா அரங்கில் ஆயுஷ் 2024 பாரம்பரிய மருத்துவ கண்காட்சியை மதுரை மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார். சித்த மருத்துவ மூலிகை தோட்டம் சார்பில் சந்தனம், சர்பகந்தி உள்ளிட்ட 190 வகையான மூலிகை தாவரங்கள் 110 வகையான மூலப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த திறப்பு விழாவில் மாநகராட்சி அதிகாரிகள் நிறுவனத்தின் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கண்காட்சிக்கு வருகை தந்திருந்தனர்.