கன்னியாகுமரி அக் 14
அஞ்சுகிராமத்தில் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா இரண்டு நாட்கள் நடைபெற்றது.
முதல் நாளான 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஆயுத பூஜை ஆறு முப்பது மணிக்கு இன்னிசை வேந்தன் பொன். சுப்பையா நடுவராக பங்கேற்ற மனிதன் மகிழ்ச்சியாக வாழ்ந்தது திருமணத்திற்கு முன்பா? பின்பா? என்ற தலைப்பில் அகிலராகம் கலைக்குழுவின் நகைச்சுவை இசை பட்டிமன்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சியினை அஞ்சுகிராமம் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் வஸீம் தலைமையில் கௌரவ ஆலோசகர் ரவிச்சந்திரன் முன்னிலையில்
கன்னியாகுமரி டிஎஸ்பி மகேஷ் குமார் தொடங்கி வைத்தார்.
இரண்டாம் நாள் 12ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு திருநெல்வேலி டாக்டர் பிரேமம் சந்திரனின் பிரேம காலங்கள் (100% மேனுவல் ஆர்கெஸ்ட்ரா) கேரளா புகழ் பாடகிகளுடன் சூப்பர் சிங்கர் விக்னேஷ் குட்டி அக்ஷரா லட்சுமி மற்றும் ரியானா ஆகியோர் பங்குபெற்ற மிகப் பிரம்மாண்டமான இன்னிசை விருந்து நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை அஞ்சுகிராமம் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் வஸீம் தலைமையில்
சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஆதம்அலி, அஞ்சுகிராமம் உதவி ஆய்வாளர் லிபி பால்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக
கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் பார்வையாளர்களுக்கு
கூப்பன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை அஞ்சுகிராமம் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் வஸீம், செயலாளர் இராஜலிங்கம், பொருளாளர் கனகராஜ், செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ்குமார்,, கணேஷ் சௌந்தரபாண்டியன், மிக்கேல்ராஜ், பாலன், ஹிட்லர், எஸ்.பி.பாலன், சேகர், கிறிஸ்டோபர், விஸ்வநாதன், செல்வகுமாரன், சுரேஷ் நாராயணன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.